அபூ தர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ தர்ரே! தொழுகையை (அதன் உரிய நேரத்தை விட்டும்) தாமதப்படுத்தும் - அல்லது 'தொழுகையைப் பிற்படுத்தும்' - ஆட்சியாளர்கள் உங்கள் மீது வரும்போது நீங்கள் எப்படி இருப்பீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். அவர்களுடன் (ஜமாஅத்தாகத் தொழும் வாய்ப்பை) நீங்கள் அடைந்தால், அதனையும் தொழுது கொள்ளுங்கள். ஏனெனில், அது உங்களுக்கு ஒரு உபரியான (நஃபிலான) தொழுகையாக இருக்கும்' என்று கூறினார்கள்.