அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பார்வையற்றவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "தொழுகைக்கு என்னை அழைத்துச் செல்ல எனக்கு வழிகாட்டி இல்லை" என்றார். மேலும், தனது வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்குச் சலுகை வழங்குமாறு அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு, அவர் திரும்பிச் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "தொழுகைக்கான அழைப்பு (அதான்) உமக்குக் கேட்கிறதா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால், அதற்குப் பதிலளியுங்கள் (பள்ளிவாசலுக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுங்கள்)" என்று கூறினார்கள்.
وعنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل أعمي، فقال: يا رسول الله، ليس لي قائد يقودني إلى المسجد، فسأل رسول الله صلى الله عليه وسلم أن يرخص له فيصلي في بيته، فرخص له، فلما ولى دعاه فقال له: "هل تسمع النداء بالصلاة؟ " قال نعم، قال: "فأجب" ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு பார்வையற்றவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பள்ளிவாசலுக்கு என்னை அழைத்துச் செல்ல எனக்கு வழிகாட்டி எவருமில்லை" என்று கூறினார். எனவே, அவர் தமது வீட்டில் தொழுகையை நிறைவேற்றிக்கொள்ள தமக்குச் சலுகை அளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சலுகை வழங்கினார்கள். அவர் திரும்பிச் சென்றபோது, அவரை அழைத்த நபி (ஸல்) அவர்கள், "தொழுகைக்கான அழைப்பை நீர் செவியுறுகின்றீரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் (தொழுகைக்கான அழைப்பிற்கு) பதிலளிப்பீராக!" என்று கூறினார்கள்.