ஜுன்தப் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் சுப்ஹு (ஃபஜ்ர்) தொழுகையைத் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருக்கிறார். எனவே, அல்லாஹ் தனது பாதுகாப்புத் தொடர்பாக உங்களிடம் எதையும் கோராதவாறு (கவனமாக) இருந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவன் எவரிடம் (விளக்கம்) கோருகிறானோ அவரைப் பிடித்துவிடுவான்; பின்னர் அவரை நரக நெருப்பில் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்."