இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1054ரியாதுஸ் ஸாலிஹீன்
وعنه أن النبي صلى الله عليه وسلم قال‏:‏‏ ‏من تطهر في بيته، ثم مضى إلى بيت من بيوت الله، ليقضي فريضة من فرائض الله كانت خطواته، إحداها تحط خطيئة، والأخرى ترفع درجة‏ ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவர் தனது வீட்டில் உளூச் செய்து தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஒன்றான பள்ளிவாசலை நோக்கி நடந்து செல்கிறாரோ, அவர் எடுத்து வைக்கும் ஒரு காலடி அவரது பாவங்களை அழிக்கிறது, மற்றொரு காலடி (சுவர்க்கத்தில்) அவரது அந்தஸ்தை உயர்த்துகிறது."

முஸ்லிம்.