أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا بَعْدَ الرُّكُوعِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் ருகூவிற்குப் பிறகு குனூத் ஓதி பிரார்த்தனை செய்தார்கள். (அவர்கள்) ரிஃல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகியோருக்கெதிராக (பிரார்த்தித்தார்கள்). உஸய்யா (என்ற கோத்திரம்) அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்தது. (இந்த மூன்று கோத்திரங்களும் பிஃர் மஊனா சம்பவத்தில் முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைத்திருந்தன.)