وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَامِرٍ، أَنَّ أَبَاهُ، أَخْبَرَهُ أَنَّهُ، رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى السُّبْحَةَ بِاللَّيْلِ فِي السَّفَرِ عَلَى ظَهْرِ رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ.
அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அவர்களின் தந்தை, நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது இரவில் தமது வாகனத்தின் மீது, அது எத்திசையை நோக்கிச் சென்றாலும் அத்திசையை முன்னோக்கியவர்களாக, (சுன்னத் அல்லது) நஃபில் தொழுவதைக் கண்டதாக (தம் மகன் அப்துல்லாஹ் பின் ஆமிர் அவர்களுக்குக்) கூறியிருந்தார்கள்.
ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் தனது தந்தை (அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது வாகனத்தின் மீது, அது எந்த திசையை நோக்கி திரும்பினாலும் சரி, நஃபிலான (கூடுதலான) தொழுகையை தொழுவார்கள். மேலும், அவர்கள் அதிலேயே வித்ரு தொழுகையையும் தொழுவார்கள். ஆனால், கடமையான தொழுகையை அதன் மீது தொழமாட்டார்கள்.