இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1163ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا بَيَانُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمْ يَكُنِ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى شَىْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مِنْهُ تَعَاهُدًا عَلَى رَكْعَتَىِ الْفَجْرِ‏.‏
`ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் (சுன்னா) தொழுகையை விட வேறு எந்த நவாஃபிலையும் அதிக பேணுதலுடனும் வழமையாகவும் தொழுததில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1254சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَكُنْ عَلَى شَىْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مُعَاهَدَةً مِنْهُ عَلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வேறு எந்த நஃபிலான தொழுகைகளைக் காட்டிலும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னுள்ள நஃபிலான ரக்அத்களைப் பேணுவதில் அதிக அக்கறை கொண்டவர்களாக இருந்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)