உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இன்றிரவு எனக்கு சில வசனங்கள் அருளப்பட்டன; அவை போன்றவை இதற்கு முன் காணப்பட்டதில்லை. (அவை:) ‘குல் அவூது பிரப்பில் ஃபலக்’ மற்றும் ‘குல் அவூது பிரப்பின் நாஸ்’ ஆகியனவாகும்.”
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனக்குச் சில வசனங்கள் அருளப்பட்டுள்ளன; அவற்றைப் போன்று (எவையும்) காணப்பட்டதில்லை. (அவை:) '{குல் அஊது பிரப்பில் ஃபலக்}' எனத் தொடங்கும் சூரா அதன் இறுதி வரையிலும், மற்றும் '{குல் அஊது பிரப்பில் நாஸ்}' எனத் தொடங்கும் சூரா அதன் இறுதி வரையிலும் ஆகும்."