உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“பருவமடைந்த பெண்களையும், திரைக்குள் இருக்கும் (கன்னிப்) பெண்களையும் நாங்கள் வெளியே அழைத்து வர வேண்டும் என்று கட்டளையிடப்பட்டோம்.”
ஹஃப்ஸா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இது போன்றே வந்துள்ளது. அதில், “பருவமடைந்த பெண்கள் அல்லது திரைக்குள் இருக்கும் பெண்கள் (வெளியே வரவேண்டும்). மேலும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழுமிடத்திலிருத்து விலகி இருக்க வேண்டும்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.