حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ، صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ. قَالَ عَبْدُ اللَّهِ ـ رضى الله عنه ـ فَجَعَلَ النَّاسُ عِدْلَهُ مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஃபித்ரா ஸகாத்தாக ஒரு ஸாஃ அளவு பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ அளவு வாற்கோதுமை (கொடுக்குமாறு) கட்டளையிட்டார்கள். (அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி மேலும் கூறினார்கள்:) மக்கள் (இந்த ஒரு ஸாஃ அளவு பேரீச்சம்பழம் அல்லது வாற்கோதுமைக்கு) சமமாக இரண்டு முத் கோதுமையை (கொடுப்பதாக) ஆக்கிக்கொண்டார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَمَرَ بِزَكَاةِ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ . قَالَ عَبْدُ اللَّهِ فَجَعَلَ النَّاسُ عِدْلَهُ مُدَّيْنِ مِنْ حِنْطَةٍ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத்துல் ஃபித்ரை, ஒரு ஸாஃ பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ வாற்கோதுமை என (முஸ்லிம்கள் மீது) கடமையாக்கினார்கள். அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: மக்கள் அதற்கு நிகராக இரண்டு முத்து (அதாவது, ஒரு ஸாஃவில் பாதி) கோதுமையை ஆக்கிக்கொண்டனர்.