حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَرَضَ زَكَاةَ الْفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ، عَلَى كُلِّ حُرٍّ أَوْ عَبْدٍ، ذَكَرٍ أَوْ أُنْثَى، مِنَ الْمُسْلِمِينَ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அடிமையாயினும் சரி, சுதந்திரமானவராயினும் சரி, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஸகாத்துல் ஃபித்ர்ராக ஒரு ஸாவு பேரீச்சம்பழம் அல்லது வாற்கோதுமை கொடுப்பதைக் கடமையாக்கினார்கள்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ، اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِإِخْرَاجِ زَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ .
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன் ஸதக்கத்துல் ஃபித்ரைச் செலுத்துமாறு கட்டளையிட்டார்கள்.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ رَمَضَانَ عَلَى كُلِّ صَغِيرٍ وَكَبِيرٍ حُرٍّ وَعَبْدٍ وَذَكَرٍ وَأُنْثَى صَاعًا مِنْ تَمْرٍ أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனைவர் மீதும் ரமழானின் ஸகாத்தாக ஒரு ஸாஃ அளவு பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ அளவு வாற்கோதுமையைக் கடமையாக்கினார்கள்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் இறுதியில் முஸ்லிம்களில் உள்ள சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய ஒவ்வொருவர் மீதும் ஒரு ஸாவு பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாவு வாற்கோதுமையை ஸகாத்துல் ஃபித்ராக கடமையாக்கினார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம்களில் அடிமைகள், சுதந்திரமானவர்கள், ஆண்கள், பெண்கள் ஆகியோர் மீது ஒரு ஸாஃ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாஃ அளவு வாற்கோதுமையை ஸகாத்தாக விதியாக்கினார்கள். (இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்லமா அவர்கள் மாலிக்கிடம் ஓதிக் காட்டினார்கள்)
யஹ்யா அவர்கள் மாலிக் அவர்களிடமிருந்தும், மாலிக் அவர்கள் நாஃபிஉ அவர்களிடமிருந்தும், நாஃபிஉ அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்தும் எனக்கு அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளான் மாத இறுதியில் நோன்புப் பெருநாள் ஸகாத்தை (ஸகாத்துல் ஃபித்ரை) ஒவ்வொரு முஸ்லிமின் மீதும், அவர் சுதந்திரமானவராக இருந்தாலும் சரி, அடிமையாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கடமையாக்கினார்கள்; மேலும் அதனை ஒரு ஸாஃ பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாஃ வாற்கோதுமை என நிர்ணயித்தார்கள்.