இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2591ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَنْفِقِي وَلاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ، وَلاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ ‏ ‏‏.‏
அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "செலவிடுங்கள்; கணக்குப் பார்க்காதீர்கள். (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உங்களுக்குக் கணக்குப் பார்த்துத் தருவான். (பொருளைப்) பதுக்கி வைக்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உங்களிடமிருந்து (தன் அருளைத்) தடுத்துவிடுவான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1029 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصٌ، - يَعْنِي ابْنَ غِيَاثٍ - عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، - رضى الله عنها - قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ أَنْفِقِي - أَوِ انْضَحِي أَوِ انْفَحِي - وَلاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ ‏ ‏ ‏.‏
அபூபக்ர் (ரழி) அவர்களின் மகளான அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: "செலவிடு -அல்லது அள்ளி வழங்கு அல்லது வாரி வழங்கு- (பொருளைக்) கணக்கிடாதே! (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வும் உனக்குக் கணக்கிட்டே வழங்குவான்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح