முஆவியா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கேட்கும்போது வற்புறுத்திக் கேட்காதீர்கள். உங்களில் ஒருவர் என்னிடம் எதையேனும் கேட்டு, நான் அதை விருப்பமில்லாமல் கொடுத்தால், அதில் எந்த பரக்கத்தும் இருக்காது."
وعن أبي سفيان صخر بن حرب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تلحفوا في المسألة، فوالله لا يسألني أحد منكم شئياً، فتخرج له مسألته مني شئا وأنا له كاره، فيبارك له فيما أعطيته ((رواه مسلم)).
அபூ சுஃப்யான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யாசகம் கேட்பதில் வற்புறுத்திக் கேட்காதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் என்னிடம் எதையாவது கேட்டு, நான் அதை மன விருப்பமின்றி அவருக்குக் கொடுத்தால், நான் அவருக்குக் கொடுப்பதில் எந்த பரக்கத்தும் (அருள்வளமும்) இருக்காது."