இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

264ரியாதுஸ் ஸாலிஹீன்
وعنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ ‏ ليس المسكين الذي ترده التمرة والتمرتان، ولا اللقمة واللقمتان إنما المسكين الذي يتعفف‏ ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒன்று அல்லது இரண்டு பேரீச்சம்பழங்களைக் கொண்டோ, அல்லது ஒன்று அல்லது இரண்டு கவளம் உணவைக் கொண்டோ (திருப்தியடைந்து) திருப்பியனுப்பப்படுபவர் மிஸ்கீன் (ஏழை) அல்லர். உண்மையான மிஸ்கீன் என்பவர், (தமக்கு வறுமை இருந்தும்) யாசகம் கேட்பதைத் தவிர்த்துக் கொள்பவரே ஆவார்."