وعن عمر رضي الله عنه قال: قسم رسول الله صلى الله عليه وسلم قسماً، فقلت: يا رسول الله لغير هؤلاء كانوا أحق به منهم؟ فقال: إنهم خيروني أن يسألوني بالفحش فأعطيهم، أو يبخلوني، ولست بباخل . ((رواه مسلم)).
உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில செல்வங்களைப் பங்கிட்டார்கள். நான் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கொடுத்த இவர்களை விட அதிக தகுதியுடையவர்கள் வேறு சிலரும் இருப்பதாக தாங்கள் கருதவில்லையா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள், "அவர்கள் என்னிடம் வற்புறுத்திக் கேட்பது, அல்லது என்னைக் கஞ்சன் என்று அவர்கள் கருதுவது ஆகிய இரண்டைத் தவிர வேறு வழியை எனக்கு அவர்கள் விட்டு வைக்கவில்லை; ஆனால் நானோ கஞ்சன் அல்லன்."