அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் தங்களின் ஸதக்காவை (தர்மத்தை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரும்போது, அவர்கள் "அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி ஃபுலான்" (யா அல்லாஹ்! இன்னாரின் குடும்பத்தார் மீது அருள்புரிவாயாக!) என்று கூறுவார்கள். என் தந்தை தனது ஸதக்காவை அவர்களிடம் கொண்டுவந்தபோது, "அல்லாஹும்ம ஸல்லி அலா ஆலி அபீ அவ்ஃபா" (யா அல்லாஹ்! அபூஅவ்ஃபாவின் குடும்பத்தார் மீது அருள்புரிவாயாக!) என்று அவர்கள் கூறினார்கள்.