அபூபக்கர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மர்வான் தம்மை உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம், ஒருவர் ஜுனுப் நிலையில் காலைப்பொழுதை அடைந்தால் (அதாவது, ஃபஜ்ரு நேரம் அவரை அடைந்துவிட்டால்) அவர் நோன்பு நோற்க வேண்டுமா என்று கேட்பதற்காக அனுப்பினார். அதற்கு உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில வேளைகளில், கனவு ஸ்கலிதத்தின் காரணமாக அன்றி, தாம்பத்திய உறவின் காரணமாக ஜுனுப் நிலையில் காலைப்பொழுதை அடைவார்கள். ஆயினும், அவர்கள் (அந்த) நோன்பை முறித்ததுமில்லை, (அதற்காகப்) பின்னர் ஈடு செய்ததுமில்லை.