இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1930ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، وَأَبِي، بَكْرٍ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُدْرِكُهُ الْفَجْرُ ‏{‏جُنُبًا‏}‏ فِي رَمَضَانَ، مِنْ غَيْرِ حُلُمٍ فَيَغْتَسِلُ وَيَصُومُ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் (தம் மனைவியருடன் உறவு கொண்டதன் காரணமாக) குளிப்பு கடமையான நிலையில் இருக்கும்போதே ஃபஜ்ர் நேரம் வந்துவிடும். பிறகு அவர்கள் குளிப்பார்கள்; மேலும் நோன்பு நோற்பார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
611 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا لَمْ يَظْهَرِ الْفَىْءُ فِي حُجْرَتِهَا ‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் தம் அறையில் இருக்கும்போதும், (மதியத்திற்குப் பிந்தைய) நிழல் தம் அறையில் (இன்னும்) தோன்றியிராதபோதும் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح