حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، وَقَعَ بِامْرَأَتِهِ فِي رَمَضَانَ، فَاسْتَفْتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " هَلْ تَجِدُ رَقَبَةً ". قَالَ لاَ. قَالَ " هَلْ تَسْتَطِيعُ صِيَامَ شَهْرَيْنِ ". قَالَ لاَ. قَالَ " فَأَطْعِمْ سِتِّينَ مِسْكِينًا ".
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் ரமலான் மாதத்தில் (நோன்பு நோற்றிருந்த நிலையில்) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். எனவே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பைக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடிமையை (விடுதலை செய்ய) உம்மால் பெற முடியுமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை” என்றார். “இரண்டு மாதங்கள் (தொடர்ச்சியாக) நோன்பு நோற்க உங்களால் முடியுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், “இல்லை” என்றார். “அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு உணவளியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.