இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2312சுனனுந் நஸாயீ
أَخْبَرَنِي أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مَرْوَانُ، قَالَ حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي نَضْرَةَ الْمُنْذِرِ، عَنْ أَبِي سَعِيدٍ، وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُمَا سَافَرَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَصُومُ الصَّائِمُ وَيُفْطِرُ الْمُفْطِرُ وَلاَ يَعِيبُ الصَّائِمُ عَلَى الْمُفْطِرِ وَلاَ الْمُفْطِرُ عَلَى الصَّائِمِ ‏.‏
அபூ சயீத் (ரழி) மற்றும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்:

அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்தார்கள். சிலர் நோன்பு நோற்றனர், சிலர் நோன்பு நோற்கவில்லை. நோன்பு நோற்றவர்கள் நோன்பு நோற்காதவர்களைக் குறை கூறவில்லை, நோன்பு நோற்காதவர்களும் நோன்பு நோற்றவர்களைக் குறை கூறவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)