ருபைய்யி பின்த் முஅவ்வித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளின் காலையில் அன்சாரிகளின் கிராமங்களுக்கு (ஆள்) அனுப்பி, “யாரேனும் (காலையில்) நோன்பில்லாதவராக இருந்தால், அவர் அந்நாளின் எஞ்சியப் பொழுதை (நோன்பு நோற்று) நிறைவு செய்யட்டும்; யாரேனும் நோன்பாளியாக இருந்தால், அவர் நோன்பைத் தொடரட்டும்” என்று கூறினார்கள்.
மேலும் அவர் கூறினார்கள்: “அதன் பிறகு நாங்கள் அந்நாளில் நோன்பு நோற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். நாங்கள் அவர்களுக்காகக் கம்பளியால் (அல்லது பஞ்சு போன்ற மென்மையான பொருளால்) விளையாட்டுப் பொருளைச் செய்வோம். அவர்களில் யாரேனும் உணவுக்காக அழுதால், நோன்பு திறக்கும் நேரம் வரும் வரை அதை (அந்த விளையாட்டுப் பொருளை) அவனிடம் கொடுப்போம்.”