حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ أَعْيَنَ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ جَعْفَرٍ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ مَاتَ وَعَلَيْهِ صِيَامٌ صَامَ عَنْهُ وَلِيُّهُ . تَابَعَهُ ابْنُ وَهْبٍ عَنْ عَمْرٍو. وَرَوَاهُ يَحْيَى بْنُ أَيُّوبَ عَنِ ابْنِ أَبِي جَعْفَرٍ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் ஒருவர் மரணித்து விட்டாரோ, அவர் மீது (விடுபட்ட ரமளான்) நோன்புகள் கடமையாக இருந்த நிலையில், அவருடைய பொறுப்பாளர்கள் அவர் சார்பாக நோன்பு நோற்க வேண்டும்."
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் மீது நோன்பு கடமையாக உள்ள நிலையில் அவர் இறந்துவிட்டால், அவருக்காக அவருடைய வாரிசு நோன்பு நோற்க வேண்டும்.
அபூ தாவூத் அவர்கள் கூறினார்கள்: இது ஒருவர் நேர்ச்சை செய்த நோன்புக்குப் பொருந்தும்; இதுவே அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களின் கருத்தாகும்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் ஒருவர் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் அவர் இறந்துவிட்டால், அவருடைய வாரிசு அவருக்காக நோன்பு நோற்க வேண்டும்.
وعنها رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: من مات وعليه صوم، صام عنه وليه ((متفق عليه)).
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் ஸவ்ம் (நோன்புகள்) நோற்காமல் மரணித்து விட்டால், அவருடைய வலீ அவருக்காக நோன்பு நோற்க வேண்டும்."