இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2426சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيُّ، حَدَّثَنَا غَيْلاَنُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ، بِهَذَا الْحَدِيثِ زَادَ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ صَوْمَ يَوْمِ الاِثْنَيْنِ وَيَوْمِ الْخَمِيسِ قَالَ ‏ ‏ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ الْقُرْآنُ ‏ ‏ ‏.‏
அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

(முன்பு கூறப்பட்ட) இதே ஹதீஸில் மேலதிகமாகக் கூறப்பட்டுள்ளதாவது:
அவர், “அல்லாஹ்வின் தூதரே! திங்கள் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் நோன்பு நோற்பது பற்றி (தங்கள் கருத்து) என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர் (ஸல்), “அந்நாளில்தான் நான் பிறந்தேன்; மேலும் அந்நாளில்தான் என் மீது குர்ஆன் அருளப்பட்டது” என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)