இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6991ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنه ـ أَنَّ أُنَاسًا، أُرُوا لَيْلَةَ الْقَدْرِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، وَأَنَّ أُنَاسًا أُرُوا أَنَّهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ الْتَمِسُوهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
சிலருக்கு லைலத்துல் கத்ர் (ரமலான் மாதத்தின்) கடைசி ஏழு நாட்களில் இருப்பதாகவும், மேலும் சிலருக்கு அது கடைசிப் பத்து நாட்களில் இருப்பதாகவும் (கனவில்) காண்பிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "(ரமலானின்) கடைசி ஏழு நாட்களில் அதைத் தேடுங்கள்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح