حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَرْكَبُ رَاحِلَتَهُ بِذِي الْحُلَيْفَةِ ثُمَّ يُهِلُّ حَتَّى تَسْتَوِيَ بِهِ قَائِمَةً.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல் ஹுலைஃபாவில் தமது வாகனத்தில் ஏறுவதையும், பின்னர் அவ்வாகனம் அவர்களைச் சுமந்துகொண்டு நிமிர்ந்து நின்றதும் (ஹஜ் அல்லது உம்ராவிற்கான) தல்பியா சொல்வதையும் நான் பார்த்தேன்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பயணத்) துவக்கத்தில் துல்ஹுலைஃபாவில் இரவு தங்கினார்கள். மேலும் அதன் பள்ளிவாசலில் தொழுதார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை துல்-ஹுலைஃபாவில் அவர்களுடைய வாகனத்தில் சவாரி செய்வதைப் பார்த்தேன். பிறகு, அது அவர்களுடன் எழுந்து நின்றபோது அவர்கள் தல்பியாவை (உரக்கக் கூறத்) தொடங்கினார்கள்."