حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَيَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ. تَابَعَهُ الدَّرَاوَرْدِيُّ عَنِ ابْنِ أَخِي الزُّهْرِيِّ عَنْ عَمِّهِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
தங்களின் இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்தவர்களாக கஃபாவை தவாஃப் செய்தார்கள் மேலும் வளைந்த தலைப்பகுதியுடைய ஒரு தடியால் மூலைக்கு (ஹஜருல் அஸ்வத்) நேராக சுட்டிக்காட்டினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், தாம் ஒரு கழுதையின் மீது சவாரி செய்து வந்ததாகவும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்போது) ஹஜ்ஜத்துல் விதாவின்போது மினாவில் மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்ததாகவும் அறிவித்து, மேலும் (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
அந்தக் கழுதை ஸஃப்புக்கு முன்னால் சென்றது; பின்னர் அவர்கள் அதிலிருந்து இறங்கி மக்களுடன் ஸஃப்பில் சேர்ந்துகொண்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்து ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டபோது, (முதல் தவாஃபில்) ஏழு சுற்றுகளில் மூன்று சுற்றுகளில் அவர்கள் விரைந்து நடந்ததை நான் பார்த்தேன்.
தம் தந்தை (ரழி) அவர்கள் வாயிலாக சலீம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கருப்பு மூலையையும் (அதில் கருங்கல் பதிக்கப்பட்டுள்ளது), மற்றும் ஜுமுஹி கோத்திரத்தாரின் வீடுகளுக்கு நேராக அதற்கு (கருப்பு மூலைக்கு) அருகிலுள்ள (அந்தப்) பகுதியையும் தவிர, (கஅபா) இல்லத்தின் வேறு எந்த மூலைகளையும் தொடவில்லை.
இந்த ஹதீஸ் இப்னு ஷிஹாப் அவர்களின் அறிவிப்பின்படி, ('ஆயிஷா (ரழி) அவர்களிடமிருந்து) அதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது (அதன் வாசகங்களாவன):
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் (ரழி) அவர்கள், ஹஜ்ஜத்துல் விதாவின்போது தூய்மையான நிலையில் தவாஃப் இஃபாதாவைச் செய்த பிறகு மாதவிடாய் அடைந்தார்கள்; ஹதீஸின் எஞ்சிய பகுதி அப்படியே உள்ளது.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். வளைந்த நுனியுடைய கைத்தடியால் ருக்ன் 1 ஐத் தொட்டார்கள்.
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ حَدَّثَنَا شُعَيْبٌ، - وَهُوَ ابْنُ إِسْحَاقَ - عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ طَافَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ حَوْلَ الْكَعْبَةِ عَلَى بَعِيرٍ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنِهِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹஜ்ஜத்துல் விதாவின்போது ஒட்டகத்தின் மீது (அமர்ந்து), தமது வளைந்த தடியால் மூலையைத் தொட்டவாறு கஅபாவை தவாஃப் செய்தார்கள்." (ஸஹீஹ்)
இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீது தவாஃப் செய்து, வளைந்த தடியால் மூலையை(ஹஜருல் அஸ்வத்) தொட்டார்கள்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ طَافَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது ஒட்டகத்தின் மீது தவாஃப் செய்தார்கள்; அப்போது ஒரு தடியால் மூலையைத் தொட்டார்கள்.