حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَفَاضَ يَوْمَ النَّحْرِ ثُمَّ صَلَّى الظُّهْرَ بِمِنًى يَعْنِي رَاجِعًا .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் அறுத்துப் பலியிடும் நாளில் கடமையான தவாஃபை (தவாஃபுல் ஸியாராவை) செய்தார்கள்; பின்னர் அவர்கள் மினாவுக்குத் திரும்பி வந்தபோது லுஹர் தொழுகையைத் தொழுதார்கள்.