ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் ஆடுகளுக்கு மாலை அணிவிப்போம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அனுப்பி வைப்பார்கள். (அப்போது) அவர்கள் இஹ்ராம் அணியாத (ஹலால்) நிலையிலேயே இருப்பார்கள். (இஹ்ராம் அணிந்தவருக்குத்) தடுக்கப்பட்ட எதுவும் அவர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கவில்லை."