ஒருவர் ஒரு குர்பானி ஒட்டகத்துடனோ அல்லது ஒரு குர்பானி பிராணியுடனோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அப்போது அவர்கள் (ஸல்) கூறினார்கள்: அதன் மீது சவாரி செய்வீராக.
அதற்கு அவர் கூறினார்: இது ஒரு குர்பானி ஒட்டகம், அல்லது பிராணி. அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: (சவாரி செய்வீராக) அது (குர்பானி ஒட்டகமாக) இருந்தாலும்.