இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவர் தனது தந்தை அல்லாத ஒருவருடன் தன்னை இணைத்துக் கொள்கிறாரோ, அல்லது (விடுவிக்கப்பட்ட அடிமை ஒருவர்) தனது வலா தனது உண்மையான எஜமானர் அல்லாத பிறருக்கு உரியது என்று உரிமை கோருகிறாரோ, அவர் மீது அல்லாஹ்வின், வானவர்களின், இன்னும் மக்கள் அனைவரின் சாபம் உண்டாகும்.”