இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
ஒருவர், தம் சகோதரர் ஒரு வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது (அந்த) வியாபாரத்தின் மீது வியாபாரம் செய்யவோ, தம் சகோதரர் (ஒரு பெண்ணிடம்) பெண் கேட்டிருக்கும்போது (அதே பெண்ணிடம்) பெண் கேட்கவோ கூடாது; அவர் (அந்த முதல் சகோதரர்) அனுமதி கொடுத்தால் தவிர.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் சகோதரர் பெண் கேட்டதன் மீது பெண் கேட்க வேண்டாம்; மேலும் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் வியாபாரத்தின் மீது, அவருடைய அனுமதியுடன் தவிர, வியாபாரம் செய்ய வேண்டாம்.
وعن ابن عمر رضي الله عنهما، أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يبع بعضكم على بيع بعض، ولا يخطب على خطبة أخيه إلا أن يأذن له ((متفق عليه، وهذا لفظ مسلم))
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரர் ஏற்கெனவே பேரம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம்; மேலும், தன் சகோதரர் பெண் கேட்டிருப்பது நிலுவையில் இருக்கும்போது, பின்னவரின் அனுமதியின்றி, இவரும் பெண் கேட்க வேண்டாம்."