அப்துர்-ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "என் மீது திருமணத்தின் மகிழ்ச்சி இருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். ஆகவே நான், 'நான் அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன்' என்று கூறினேன். அவர்கள், 'அவளுக்கு மஹராக எவ்வளவு கொடுத்தீர்கள்?' என்று கேட்டார்கள். (அதற்கு), 'ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்குத் தங்கம்' என்று கூறினேன்."