حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ كَانَتِ الْيَهُودُ تَقُولُ إِذَا جَامَعَهَا مِنْ وَرَائِهَا جَاءَ الْوَلَدُ أَحْوَلَ. فَنَزَلَتْ {نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ}
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள், "ஒருவர் தம் மனைவியுடன் பின்னாலிருந்து தாம்பத்திய உறவு கொண்டால், குழந்தை மாறுகண் உள்ளதாகப் பிறக்கும்" என்று கூறி வந்தனர். எனவே, "{நிஸாவுக்கும் ஹர்ஸுன் லக்கும் ஃபஃதூ ஹர்ஸக்கும் அன்ன ஷிஃதும்}" (உங்கள் மனைவியர் உங்களுக்கு ஒரு விளைநிலம் ஆவார்கள்; ஆகவே, நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் விளைநிலத்தை அணுகுங்கள்) எனும் இறைவசனம் அருளப்பெற்றது.
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: யூதர்கள் (இவ்வாறாக) கூறிவந்தனர்: ஒருவன் தன் மனைவியுடன் அவளுடைய பின்னாலிருந்து அவளுடைய பெண்ணுறுப்பின் வழியாக (தாம்பத்திய) உறவு கொண்டால், பிறக்கும் குழந்தைக்கு மாறுகண் ஏற்படும். (இதன் காரணமாகவே) இந்த வசனம் இறங்கியது: "உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவர்; ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்" (அல்குர்ஆன் 2:223).
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவர் தம் மனைவியின் பின்புறமாக இருந்து (அவளது) யோனி வழியாக உடலுறவு கொண்டால், (பிறக்கும்) குழந்தைக்கு மாறுகண் இருக்கும்” என்று யூதர்கள் கூறி வந்தார்கள். (அவர்களின் இந்த தவறான கூற்றை மறுக்கும் விதமாக) அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா, “நிஸாவுக்கும் ஹர்ஸுல் லக்கும் ஃபஃதூ ஹர்ஸக்கும் அன்ன ஷிஃதும்” (உங்கள் மனைவியர் உங்களுக்கு ஒரு விளைநிலம் ஆவர்; எனவே, உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்) என்று இறக்கியருளினான்.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறியதாவது: “ஒருவர் ஒரு பெண்ணின் பிறப்புறுப்பில் (யோனியில்) பின்புறமாக (அணுகி) உறவு கொண்டால், குழந்தை மாறுகண்ணுடன் பிறக்கும் என்று யூதர்கள் (தவறாக) கூறி வந்தார்கள். அப்போது, கண்ணியமிக்க அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்: 'நிஸாஉக்கும் ஹர்ஸுன் லக்கும் ஃபஃதூ ஹர்ஸக்கும் அன்னா ஷிஃதும்' (இதன் பொருள்: 'உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலங்கள் ஆவார்கள். ஆகவே, உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் நாடியவாறு செல்லுங்கள்.')”