கணவரைத் தவிர (வேறு) இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பதற்கு எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது; ஆனால் கணவருக்காக நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (துக்கம் அனுஷ்டிக்க வேண்டும்). (துக்க நாட்களில்) நாங்கள் சுர்மா இடவோ, நறுமணம் பூசவோ, ‘அஸ்ப்’ (நூல்களிலேயே சாயம் ஏற்றப்பட்ட ஒரு வகை யமன் நாட்டு) ஆடையைத் தவிர (வேறு) சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. (எனினும்) எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து விடுபட்டு (தூய்மையாகக்) குளிக்கும்போது, ‘குஸ்துல் அழ்ஃபார்’ (எனும் நறுமணப் பொருளி)ல் சிறிதளவைப் பயன்படுத்த எங்களுக்குச் சலுகை வழங்கப்பட்டது. மேலும், ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வதற்கும் எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
உம் அதிய்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
இறந்தவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிப்பது எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது; கணவரைத் தவிர. அவருக்காக மனைவி நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் அனுஷ்டிக்க வேண்டும். (இத்துக்கக் காலத்தில்) எங்கள் கண்களில் சுர்மா இட்டுக் கொள்ளவோ, நறுமணம் பூசிக்கொள்ளவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ எங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை; ‘அஸ்ப்’ (யமன நாட்டில் தயாரிக்கப்படும் ஒருவகை ஆடை) எனும் ஆடையைத் தவிர. ஆனால், எங்களில் ஒருத்தி தனது மாதவிடாயிலிருந்து தூய்மையாகிக் குளித்த பின், ஒரு குறிப்பிட்ட வகை நறுமணப் பொருளின் ஒரு துண்டை அவள் பயன்படுத்திக் கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும், ஜனாஸா ஊர்வலங்களைப் பின்தொடர்ந்து செல்வது எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.