இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் 'லிஆன்' செய்துகொண்ட இருவரைக் குறித்துப் பேசினார்கள். அப்போது இப்னு ஷத்தாத் அவர்கள் அவரிடம், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் ஆதாரம் இல்லாமல் யாரையாவது கல்லெறிந்து தண்டிப்பதாக இருந்தால், இப்பெண்ணைக் கல்லெறிந்து தண்டித்திருப்பேன்” என்று கூறினார்களே, அது இந்தப் பெண்ணைப் பற்றித்தானா?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், '(அப்படியல்ல); அப்பெண் (தன் தவறான நடத்தையை) வெளிப்படையாகச் செய்து வந்தவள் ஆவாள்' என்று கூறினார்கள்.