இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3361சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ كَيْلاً وَعَنْ بَيْعِ الْعِنَبِ بِالزَّبِيبِ كَيْلاً وَعَنْ بَيْعِ الزَّرْعِ بِالْحِنْطَةِ كَيْلاً ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், ஈரப் பேரீச்சம் பழத்தை அளக்கப்பட்ட உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பகரமாக விற்பதையும், திராட்சையை அளக்கப்பட்ட உலர்ந்த திராட்சைக்குப் பகரமாக விற்பதையும், கோதுமைப் பயிரை (அறுவடை செய்யப்படாத கோதுமையை) அளக்கப்பட்ட கோதுமைக்குப் பகரமாக விற்பதையும் தடுத்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)