இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2281ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم غُلاَمًا حَجَّامًا فَحَجَمَهُ، وَأَمَرَ لَهُ بِصَاعٍ أَوْ صَاعَيْنِ، أَوْ مُدٍّ أَوْ مُدَّيْنِ، وَكَلَّمَ فِيهِ فَخُفِّفَ مِنْ ضَرِيبَتِهِ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், இரத்தம் குத்தி எடுக்கும் தொழிலைச் செய்து வந்த ஓர் அடிமையை அழைத்தார்கள். அவர், நபி (ஸல்) அவர்களுக்கு இரத்தம் குத்தி எடுத்தார். அவருக்கு ஒரு ஸாவு அல்லது இரண்டு ஸாக்கள், அல்லது ஒரு முத் அல்லது இரண்டு முத் வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். மேலும் அவருக்காக (அவரின் எஜமானர்களிடம்) பேசி, அவருடைய வரியைக் குறைக்கச் செய்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح