அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்பவர், தம் அண்டை வீட்டாருக்குத் துன்பம் இழைக்க வேண்டாம். மேலும், பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு (நான்) அறிவுறுத்துகிறேன்; ஏனெனில் அவர்கள் ஒரு விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளார்கள். விலா எலும்பிலேயே மிகவும் கோணலான பகுதி அதன் மேல் பகுதியாகும்; நீங்கள் அதை நிமிர்த்த முயன்றால், அது உடைந்துவிடும், அதை அப்படியே விட்டுவிட்டால், அது கோணலாகவே இருக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு (நான்) வலியுறுத்துகிறேன்."
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் (பொது) குளியல் இல்லத்தில் இசார் (இடுப்பு ஆடை) அணிந்தே தவிர நுழைய வேண்டாம்."
ருவைஃபி இப்னு ஸாபித் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ, அவர் (பிறிதொருவரின் கருவைச் சுமக்கும்) பெண்ணின் மீது தனது நீரைப் பாய்ச்ச வேண்டாம்."
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتْ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர், நல்லதையே பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்.”