இவர்கள் அனைவரும் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாகவே அறிவிக்கின்றனர். ஸாலிஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ''பிறகு அல்லாஹ் (நபி (ஸல்) அவர்களின் உயிரைக்) கைப்பற்றும் வரை அவர்கள் தொழவில்லை'' எனும் தகவல் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவரும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கின்றனர். யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பது பற்றியும்" (குறிப்பிடப்பட்டுள்ளது).
இவர்கள் அனைவரும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாகவே அறிவிக்கின்றனர். இது யூனுஸ் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கருத்தையே கொண்டுள்ளது. எனினும், மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'சகுனம்' (அத்-தியரா) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது; 'குறிசொல்பவர்கள்' (அல்-குஹ்ஹான்) பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாகவே மற்றவர்களும் மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்புத் தொடரில், அவரைப் போன்றே அறிவிக்கின்றனர். ஆனால் “இவர் புறக்கணிப்பார்; அவர் புறக்கணிப்பார்” என்று மாலிக் (ரஹ்) கூறியதற்கு மாற்றமாக, மற்றவர்கள் அனைவரும் தங்கள் அறிவிப்பில் “இவர் முகத்தைத் திருப்பிக்கொள்வார்; அவர் முகத்தைத் திருப்பிக்கொள்வார்” என்றே கூறியுள்ளனர்.