ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதித்த வாழ்நாள் கொடை என்பது, ஒருவர், "இது உனக்கும், உன் சந்ததியினருக்கும் உரியது" என்று கூறுவதுதான். அவர், "நீ வாழும் காலமெல்லாம் இது உனக்குரியது" என்று கூறினால், அது அதன் உரிமையாளரிடமே திரும்பிவிடும்.