இப்னு உயைனா அவர்களிடமிருந்தும் மஃமர் அவர்களிடமிருந்தும் இதுபோன்ற ஒரு ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது (அதன் வாசகங்களாவன): குழந்தை யாருடைய படுக்கையில் பிறக்கிறதோ அவருக்கே உரியதாகும்; ஆனால் அவர்கள் “விபச்சாரம் செய்தவருக்கு கல்லெறி தண்டனை உண்டு” (என்பதை) குறிப்பிடவில்லை.