وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: من ضرب غلامًا له حدًا لم يأتهِ، أو لطمه، فإن كفارته أن يعتقه ((رواه مسلم)).
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓர் அடிமையை அவன் செய்யாத ஒன்றுக்காக அடிப்பதற்கோ அல்லது அவனது முகத்தில் அறைவதற்கோ உரிய பரிகாரம் அவனை விடுதலை செய்வதாகும்."