அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் அடிமை, அல்லாஹ்வின் கடமையையும் தன் எஜமானின் கடமையையும் நிறைவேற்றினால், அவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு."
(இதையடுத்து அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) "அபூ ஹுரைராவின் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இறைவழியில் அறப்போர் புரிவதும், ஹஜ் செய்வதும், என் தாய்க்குப் பணிவிடை செய்வதும் இல்லாதிருந்தால், நான் ஓர் அடிமையாகவே மரணிக்க விரும்பியிருப்பேன்."