இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் அடிமை இருவருக்குப் பொதுவாக இருந்து, அவர்களில் ஒருவர் தமது பங்கை விடுதலை செய்தால், அவர் (விடுதலை செய்தவர்) செல்வந்தராக இருந்தால், அந்த அடிமைக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ இல்லாத ஒரு விலை அவர் மீது நிர்ணயிக்கப்படும். பிறகு அந்த அடிமை (முழுமையாக) விடுதலை செய்யப்படுவார்."