حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الْحُسَيْنُ الْمُكْتِبُ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً أَعْتَقَ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ، فَاحْتَاجَ فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ مَنْ يَشْتَرِيهِ مِنِّي فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ بِكَذَا وَكَذَا، فَدَفَعَهُ إِلَيْهِ.
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் தம் அடிமையை, தம் மரணத்திற்குப் பின் விடுதலை அடைபவராக (முதம்பர்) ஆக்கியிருந்தார். பின்னர் அவருக்கு (பணத்) தேவை ஏற்பட்டது. எனவே நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை (தம் பொறுப்பில்) எடுத்துக்கொண்டு, "என்னிடமிருந்து இவரை யார் வாங்குவார்?" என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட விலைக்கு அவரை வாங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் (அப்பணத்தை) அவரிடம் கொடுத்தார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு மனிதர் தம் அடிமையை ‘முதப்பர்’ ஆக்கினார். அந்த அடிமையைத் தவிர அவரிடம் வேறு சொத்து எதுவும் இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு இச்செய்தி எட்டியதும், “என்னிடமிருந்து இவரை யார் வாங்கிக்கொள்வது?” என்று கேட்டார்கள். நுஐம் பின் அந்நஹ்ஹாம் (ரலி) அந்த அடிமையை எண்ணூறு திர்ஹம்களுக்கு வாங்கிக்கொண்டார்கள்.
“அந்த அடிமை ‘கிப்தீ’ இனத்தைச் சேர்ந்தவர்; அவர் (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே இறந்துவிட்டார்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، مِنَ الأَنْصَارِ دَبَّرَ مَمْلُوكًا، وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَنْ يَشْتَرِيهِ مِنِّي . فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ النَّحَّامِ بِثَمَانِمِائَةِ دِرْهَمٍ. قَالَ فَسَمِعْتُ جَابِرًا يَقُولُ عَبْدًا قِبْطِيًّا مَاتَ عَامَ أَوَّلَ.
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமையை 'முதப்பர்' ஆக்கினார். அந்த அடிமையைத் தவிர அவரிடம் வேறு எந்தச் சொத்தும் இருக்கவில்லை. இச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "என்னிடம் இருந்து அந்த அடிமையை யார் வாங்குவார்?" என்று கேட்டார்கள். ஆகவே நுஐம் பின் அந்-நஹ்ஹாம் (ரழி) அவர்கள் அவரை 800 திர்ஹம்களுக்கு வாங்கினார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள் (மேலும்) கூறினார்கள்: "அவர் ஒரு கிப்தி (எகிப்திய) அடிமையாக இருந்தார்; அவர் (விற்கப்பட்ட) முதலாம் ஆண்டிலேயே இறந்துவிட்டார்."
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அன்சாரிகளில் ஒருவர் தம்மிடமிருந்த ஓர் அடிமையை (தம்) மரணத்திற்குப் பின் விடுதலை பெறுபவராக (முதப்பர்) ஆக்கினார். அவ்வடிமையைத் தவிர அவரிடம் வேறு செல்வம் ஏதும் இருக்கவில்லை. இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, “என்னிடம் இருந்து இவரை யார் வாங்குவார்?” என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் அவர்கள் அவ்வடிமையை எண்ணூறு திர்ஹம்களுக்கு வாங்கிக் கொண்டார்.
நஸாயீயின் ஓர் அறிவிப்பில்: “அம்மனிதருக்குக் கடன் இருந்தது. எனவே, நபி (ஸல்) அவர்கள் அவ்வடிமையை எண்ணூறு திர்ஹம்களுக்கு விற்று, (அத்தொகையை) அவரிடம் கொடுத்து, ‘உமது கடனை அடைப்பீராக!’ என்று கூறினார்கள்” (என்றுள்ளது).