ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக வரும் இந்த அறிவிப்பாளர் தொடரில், யூனுஸ் (ரஹ்) அவர்களின் ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளது. மஃமர் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உம்மு சலமா (ரலி) அவர்களின் வீட்டு வாசலில் சச்சரவு செய்துகொண்டிருந்தோரின் இரைச்சலைக் கேட்டார்கள்" என்று (உம்மு சலமா (ரலி)) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.