حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ يَقُولُ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الأَحْزَابِ عَلَى الْمُشْرِكِينَ فَقَالَ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ، اللَّهُمَّ اهْزِمِ الأَحْزَابَ، اللَّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ .
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்-அஹ்ஸாப் (அகழ்) போரின் நாளில் இணைவைப்பவர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்தார்கள்:
(பொருள்: "அல்லாஹ்வே! வேதத்தை அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் கூட்டத்தினரை (அதாவது, அகழ் போரில் ஒன்றுதிரண்ட எதிரிக் கூட்டத்தினரை) தோற்கடிப்பாயாக! யா அல்லாஹ்! அவர்களைத் தோற்கடித்து, அவர்களை நிலைகுலையச் செய்வாயாக!")