உம்மு அத்திய்யா அல்-அன்சாரிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இணைந்து ஏழு போர்களில் போரிட்டேன். அவர்களுடைய பொருட்களை கவனித்துக் கொண்டும், அவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்தும், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்தும், நோயாளிகளைக் கவனித்துக் கொண்டும் இருந்தேன்.”