وعنه قال: قلت يا رسول الله ألا تستعملني؟ فضرب بيده على منكبي ثم قال: “يا أبا ذر إنك ضعيف، وإنها أمانة، وإنها يوم القيامة خزي وندامة، إلا من أخذها بحقها، وأدى الذى عليه فيها” ((رواه مسلم)).
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஆட்சிப்) பணியில் அமர்த்த மாட்டீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தங்கள் கையால் என் தோளின் மீது தட்டி, "அபூ தர்ரே! நிச்சயமாக நீர் பலவீனமானவர் (ஆட்சிப் பொறுப்பைச் சுமக்கும் ஆற்றலில் குறைவுள்ளவர்). அதுவோ ஓர் அமானிதம் (நம்பிக்கைப் பொறுப்பு) ஆகும். அதை அதற்குரிய முறைப்படி (நியாயமாக) ஏற்றுக்கொண்டு, அதில் தன்மீதுள்ள கடமையை நிறைவேற்றுபவரைத் தவிர (மற்றவர்களுக்கு), நிச்சயமாக அது மறுமை நாளில் இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்" என்று கூறினார்கள்.