இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4192சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَحْيَى بْنِ حُصَيْنٍ، قَالَ سَمِعْتُ جَدَّتِي، تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي حَجَّةِ الْوَدَاعِ ‏ ‏ وَلَوِ اسْتُعْمِلَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا ‏ ‏ ‏.‏
யஹ்யா பின் ஹுஸைன் அவர்கள் கூறியதாவது:
என் பாட்டியார் கூறக் கேட்டேன்: “ஹஜ்ஜத்துல் விதாவின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழிநடத்தும் ஓர் அபிசீனிய அடிமை உங்கள் மீது நியமிக்கப்பட்டாலும், அவருக்குச் செவிசாயுங்கள்; கீழ்ப்படியுங்கள்’ என்று கூறியதை நான் கேட்டேன்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)